விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தளவாய்புரம், சேத்தூர், கீழராஜகுலராமன், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், ராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கருணாகரபிரபு தலைமையிலான சுகாதார பணியாளர்கள், காவலர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்த பின் தடுப்பூசி போட்டனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்