விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (13). இவர் தனது தந்தை வைத்துள்ள கடையில் முகக்கவசம் வடிவில் பரோட்டா போட்டு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
இதனால் அவருக்கு அப்பகுதியினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
கட்டாயம் முகக்கவசம் அணிவோம்
இது குறித்து நம்மிடம் பேசிய சிறுமி, "நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாக முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிவோம், கரோனாவை ஒழிப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி!