சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யும் சட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட தனி போக்சோ நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி திறந்து வைத்தார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், புகழேந்தி, விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
' பெரிய மருத்துவமனை அமைக்கத் தேவைப்படும் பட்ஜெட்டில் 60% வெளிநாட்டுப் பொருட்கள்! '