விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி இசக்கியம்மாள். இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.
சந்திரசேகர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு துன்புறுத்திவந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாளுக்குப் பிறந்த குழந்தை தனக்குப் பிறக்கவில்லை எனக் கூறி 2009ஆம் ஆண்டு குழந்தையைக் கொன்று வீட்டில் புதைத்துவிட்டு மனைவியுடன் வெளியூர் சென்றுள்ளார்.
இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, குழந்தையைக் கொலைசெய்த சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், அவரது மனைவி இசக்கியம்மாளுக்கு இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மகன் முகத்தில் கொதிக்கும் பருப்பை ஊற்றிய கொடூரத் தந்தை கைது..!