விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்தவகையில் இன்று(ஜூலை 31) அம்மாவட்டத்தில் 357 பேருக்குத் தொற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,865ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 4,957 பேர் நோய்ப் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 2,823 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இத்தொற்றின் காரணமாக இன்று(ஜூலை 31) மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.