விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், அரசு அலுவலர்கள் என பல்வேறு துறையினர் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் பல அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, விருதுநகர் மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் உள்பட காவல் துறையில் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அருப்புக்கோட்டையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவந்த தலைமைக் காவலர் ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சுகாதாரப் பணியிலும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுவரும் அரசு அலுவலர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகிவருவதால் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தொய்வடைந்துள்ளது.
இதையும் படிங்க: ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ.,வுக்கு கரோனா