விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரத்து 337 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆக.12) மேலும் 292 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தமாக 10 ஆயிரத்து 629 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 9 ஆயிரத்து 55 பேர் நோயின் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1,432 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி இன்று மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.