சென்னை: 'கங்குவா' திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 11,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் கங்குவா, ஃபிரான்சிஸ் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து வெளியான சூர்யா படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகியவை நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனைதொடர்ந்து 2 வருடங்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
#Kanguva is all set to storm in cinemas near you with special 9 AM shows for its release 🔥
— Studio Green (@StudioGreen2) November 12, 2024
Thank you Tamil Nadu Government
Book your tickets now
🎟️ https://t.co/LnBpBSfCrb#KanguvaFromNov14 🗡️@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/lxZBKStQiS
கங்குவா திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என நடிகர் சூர்யா ப்ரமோஷனில் தெரிவித்துள்ளார். கங்குவா ரிலீஸ் டிரெய்லர் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் கங்குவா திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது. பிரபல சினிமா வர்த்தக இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கங்குவா திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் இதுவரை இந்திய அளவில் 2.3 கோடி வசூல் செய்துள்ளது.
இந்திய அளவில் 2டியில் 338 காட்சிகள் திரையிடப்படவுள்ள நிலையில், 10455 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. அதேபோல் 3டியில் 434 காட்சிகளுக்கு 18585 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. கங்குவா திரைப்படத்திற்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 38.61 லட்ச ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் 19.99 லட்சம், தெலுங்கானாவில் 10.34 லட்ச ரூபாய்க்கு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் கேப்டனான அருண்; அன்ஷிதாவிற்கும் ஆண்கள் அணியினருக்கும் ஏற்பட்ட மோதல்!
இந்நிலையில் கங்குவா திரைப்படம் வெளியாகும் நவம்பர் 14ஆம் தேதி சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கும். நவம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்