ETV Bharat / international

போர் பதட்டம்: தைவானில் சீன போர் விமானங்கள், கப்பல்கள் நிலைநிறுத்தம்..!

தைவானில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் மற்றும் கடற்படையை சார்ந்த 5 கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - MoNDefense XPage)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 12:08 PM IST

தைபே: தைவானில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் மற்றும் சீனாவின் கடற்படையை சார்ந்த 5 கப்பல்கள் எல்லை தாண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் மீது நீண்ட காலமாக அதிகார போக்கை காட்டி வரும் சீனா அவ்வப்போது தனது ராணுவ விமானங்களையும், கப்பல்களையும் தைவானில் நிலைநிறுத்தி வருகிறது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று சீனா கருதுவதாலும், அந்த கோட்பாட்டை தைவான் ஏற்காததாலும் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், சீனா ராணுவத்தின் 10 போர் விமானங்கள் மற்றும் கடற்படையை சேர்ந்த 5 கப்பல்கள் இன்று காலை 6 மணி வரை தைவானை சுற்றி வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், '' சீனாவின் 10 போர் விமானங்களில் எட்டு, தைவானின் இடைநிலை கோட்டை கடந்து தென்மேற்கு மற்றும் கிழக்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் நுழைந்துள்ளன. நாங்கள் தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். அதேகேற்ப பதிலடி கொடுப்போம்'' என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்! பொதுமக்கள் அச்சம்

தைவானில் சீனா தனது ராணுவ விமானங்களையம், கடற்படை கப்பல்களையும் நிலைநிறுத்துவதை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அதிகரித்தது. அதன் மூலம் தைவானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை காட்ட தொடங்கியது. இதற்கு மத்தியில் தைவானும் சீனாவுக்கு எதிரான விஷயங்களை பின் வாங்காமல் நடத்தியும் வருகிறது. முன்னதாக தைவான் அதிபர் லாய் சிங் தே உயர் மட்ட தேசிய பாதுகாப்பு மாநாட்டை கூட்டினார். அதன் பிறகு பெரிய அளவில் ராணுவ பயிற்சியும் நடந்தது.

அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் லாய் சிங் தே, தைவானை பிரதிநிதித்துவப்படுத்த சீனாவுக்கு உரிமை இல்லை.. தைவான் ஜனநாயகத்துக்கும், பாதுகாப்புக்கும் வரும் எந்தவொரு இடையூறையும், அச்சுறுத்தலையும் சமாளிக்க தைவான் அரசு தயாரக உள்ளது என்று உறுதியளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.