விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு ஆண்டாள்புரம் பகுதியில் 60 வயது முதியவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதித்துள்ளார் எனத் தமிழ்நாடு சுகாதாரத் துறை மூலம் உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்தக் குடியிருப்புப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சியிலிருந்து டிபிசி தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என 220-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களைச் சந்தித்து ஏதேனும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா, வெளி மாநிலம், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் யாரேனும் உள்ளனரா, எனக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், இன்று பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் 21 வார்டு மக்களைச் சந்தித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர் கண்காணிப்பு!