ETV Bharat / state

’பேரறிவாளன் விடுதலையை கொண்டாடலாமா..?’ : கேள்விக்குப் பதிலளித்த முத்தரசன்

author img

By

Published : May 20, 2022, 11:01 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாத்தூர் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

’பேரறிவாளன் விடுதலையை கொண்டாடலாமா..?’ : கேள்விக்கு பதிலளித்த முத்தரசன்

விருதுநகர்: சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாத்தூர் வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. இதைக்கண்டித்து இம்மாதம் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இடதுசாரிகளின் சார்பாக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. ஆனால், மத்திய அரசு அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிலிண்டர் விலையை உயர்த்தி தொடர்ந்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது. இது ஜனநாயக நாடா எனக்கேள்வி வருகிறது..?.

பேரறிவாளனின் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய விஷயமா இல்லையா என்பது தற்போதைய பிரச்னை அல்ல. மாநிலத்தின் உரிமையை ஆளுநர் மதிக்கவில்லை என்பது தான் தற்போதைய பிரச்னை. ஆளுநரை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு ஆளுநர் செயல்படவில்லை என்றும்; அதன் காரணமாகவே இவ்வளவு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தால் அதைப் பாராட்டலாம்.

பேரறிவாளன் உட்பட 8 நபர்கள் தவறு செய்தார்களா... இல்லையா என்பது தற்போதைய பிரச்னை அல்ல. அவர்கள் அதிக காலம் சிறையில் இருந்துவிட்டனர். அதன் காரணமாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இஸ்லாமியர்கள் விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

எனவே இஸ்லாமியர்களின் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறிய கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்றுக் கொள்கிறது.

கர்நாடகாவில் ஆட்சி செய்வது பாஜக ஆட்சி. மேலும் தந்தை பெரியார் மற்றும் பகத்சிங் போன்றவர்களின் பாடங்கள் ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது இந்த பாடங்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் தலைவரின் வாழ்க்கை குறித்த பாடத்தை இடம்பெறுவதற்கு கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பாடம் குறித்து கர்நாடக அமைச்சர் கூறும் போது பாடத்திட்டங்கள் மாற்றுவது குறித்து குழு ஒன்று ஏற்பாடு செய்ததாகவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த பாடங்களை பாஜக அரசு எடுத்துக் கொள்ளும். ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் எந்த வித தர்ம நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது’ எனவும் கூறிய முத்தரசன் ’நாளை காந்தி குறித்த பாடத்தை கூட எடுத்து விடுவார்கள்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்' - திருமுருகன் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.