கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கட்டிட வடிவமைப்பாளர் துறையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அருகே உள்ள பயனற்ற சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சினிமா, அரசியல் சார்ந்த விளம்பர சுவரொட்டிகளை அகற்றினார்கள்.
![national leaders viruthu nagar college students கல்லூரி மாணவர்கள் ஓவியங்கள் தேசத் தலைவர்கள் wall painting சுவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4151047_vdhu-1.bmp)
இதனைத் தொடர்ந்து, தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து சுவர்களை அழுகு படுத்தும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக திருவள்ளுவர், பாரதியார், காமராஜர், அப்துல் கலாம் உள்ளிட்டோரின் உருவப் படங்களை வரைந்தனர்.
மேலும், விவசாயத்தை போற்றும் வகையில் விவசாயிகளின் ஓவியத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு விருதுநகர் மாவட்ட மக்களிடடையே பெரும் ஆதரவும், பராட்டும் குவிந்து வருகின்றது.