ETV Bharat / state

'சந்திரகுப்த மெளரியர் கால நாணயங்கள் முதல் ஏசுநாதர் கால நாணயங்கள் வரை' - நாணய சேகரிப்பாளர் ராஜராஜன்

விருதுநகர்: இந்தியாவில் முதன் முதலில் சந்திரகுப்த மெளரியர் (கி.மு 600) அச்சிட்ட நாணயம் முதல் ஏசுநாதர் கால நாணயங்கள் வரை சேகரித்து நான்கு தலைமுறைகளாகப் பாதுகாத்துவரும் பழங்காலப்பொருள்கள் பாதுகாவலர் குறித்த சிறப்புத் தொகுப்பு.

coins-collector-special-news
coins-collector-special-news
author img

By

Published : Jun 29, 2020, 2:08 PM IST

பழங்கால கலைப்பொருள்களைச் சேகரித்து பாதுகாப்பது என்பது பாரட்டக்கூடிய ஒன்று. பல நூற்றாண்டுகள் கடந்தும் பழமையின் பெருமையையும், அது குறித்த தகவலையும், சிறப்பையும் உணர்த்துவது பழங்காலப் பொருள்களே. அந்த வகையில் பட்டாசு நகர் என அழைக்கப்படும் சிவகாசியில் ராஜராஜன் குடும்பம் நான்கு தலைமுறையாக அரியவகையான பழங்காலப் பொருள்களை சேகரித்து அதனைப் பாதுகாத்துவருகிறது.

குறிப்பாக அவரிடம் இந்தியாவில் கி.மு. 600 சந்திரகுப்த மௌரியர் காலத்தில் அச்சிடப்பட்ட நாணயத்தைச் சேகரித்துவைத்துள்ளார். அதுமட்டுல்லாமல் அந்த நாணயம் வேறு யாரிடமும் கிடையாது எனவும் பெருமைப்பட கூறுகிறார். அதுதவிர ஏசுநாதர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த நாணயம், மாவீரன் அலெக்சாண்டர் உருவம் பதித்த நாணயம், சங்ககால நாணயங்கள் எனப் பல்வேறு நாணயங்கள் என்று பல பழங்கால நாணயங்களை வைத்துள்ளார்.

பழங்காலப்பொருள்கள் பாதுகாவலர் குறித்த சிறப்புத் தொகுப்பு

அவற்றில் அவருக்குப் பிடித்தது கிபி 1526லிருந்து 1858 வரை 333 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த 21 முகலாய மன்னர்களின் வெள்ளி நாணயங்கள்தானாம். மேலும் சங்ககால மரச்சிற்பங்கள், பழங்கால அலங்காரப் பொருள்கள், ஆயுதங்கள் எனப் பல நூறு ஆண்டுகள் பழமையான கலைநயம்மிக்க பொருள்களும் அவரிடம் உள்ளன. அவற்றின் மதிப்பை தன்னோடு மட்டுமல்லாமல் மற்றவர்களும் அறிவதற்காகப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி முன்னோர்களின் வாழ்க்கை முறை, கலை, பண்பாடு குறித்து விளக்கம் அளித்துவருகிறார்.

அது குறித்து அவர் கூறுகையில், "எனது தாத்தா காலத்திலிருந்து பழமையான பொருள்களைச் சேகரித்துவருகிறேன். முன்னோர்கள் பயன்படுத்திய பித்தளை, வெண்கலம், காப்பர், வெள்ளி காசுகள்தான் எனது சேகரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மேலும் பெண்களின் ஏழு பருவகாலங்களில் ஒன்றான மங்கை உருவத்தை குறிக்கும் சிற்பமும் எனது சேகரிப்பில் உள்ளது.

பழங்காலப்பொருள்கள் பாதுகாவலர் ராஜராஜன்

விலை மதிக்கமுடியாத, காலத்தால் அழியாத அப்படிப்பட்ட பொக்கிஷங்களைப் பாதுகாத்துவருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அறையை ஒதுக்கி அதில் அருங்காட்சியகம் அமைத்து மாணவர்களின் வீட்டிலிருக்கும் மிகப் பழமையான பொருள்களை எடுத்து வரச்சொல்லி பாதுகாக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.

இதையும் படிங்க: 2300 ஆண்டுகள் பழமையான ஈமச்சின்னம்... இரும்புக் காலத்துக்கு அழைத்துச் செல்லும் கொடுமணல் அகழாய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.