ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு - விருதுநகர் மாவட்ட செய்திகள்

சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சாத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு
ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு
author img

By

Published : Sep 24, 2021, 7:07 PM IST

விருதுநகர்: திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உடனிருந்தனர். அப்போது, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

பின்னர், உடனடியாக காவல் துறையினர் தலையிட்டு கூட்டத்தை கலைத்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதரவாளர் வீரோவுரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஐந்து நபர்கள் மீது சாத்தூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்த ராஜேந்திர பாஜாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.