விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள், சிறுத்தைகள், கருஞ் சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள், யானைகள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. விலங்குகளை ஆண்டுதோறும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் புலிகளை மட்டும் தனியாக கேமராக்கள் பொருத்தி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கேமராக்களில் பதிவான புலிகளின் நடமாட்டத்தை ஆய்வு செய்த அலுவலர்கள் இந்த ஆண்டு குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து கேமராக்களை பொருத்த முடிவு எடுத்தனர்.
இதற்காக இரவிலும் செயல்படக் கூடிய சுமார் 300 நவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டு 150 இடங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க; இந்தியா-நேபாள எல்லையில் பிறந்த ’பார்டர்’ குழந்தை - மோடியை விமர்சித்த அகிலேஷ்