விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மாதவராவ். இவர் நுரையீரல் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை எதிர்பாராத நிலையில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மாதவராவின் உடல் காதிபோர்டு காலனி பகுதியில் அவரது வீட்டின் அருகே இருக்கும் மயானத்தில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.