விருதுநகர்: கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாகப் பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது கறுப்புப் பூஞ்சை நோய் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் வேகமாக பரவிவரும் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைகோட்டை பகுதி, செங்குந்தர் பள்ளி தெருவைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பொன்மணி (70). இவருக்கு கருவிழி மூடிய நிலையில், கறுப்புப் பூஞ்சை நோய் அறிகுறியுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கறுப்புப் பூஞ்சை நோய் பரிசோதனை, சிகிச்சை ஆகியவைக்கு வசதி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் பெற்றோரை பிரிந்து வாடும் குழந்தைகள்- பாதுகாப்பது நமது கடமை