தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் வேட்பாளர் பாண்டுரங்கன் இன்று (மார்ச் 18) வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தானலட்சுமியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
முன்னதாக விருதுநகர் - எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக மெயின் பஜார் வழியாக வந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக ஊர்வலத்தை முடித்தனர். மேலும், இந்த ஊர்வலத்தில் பாஜக, அதிமுக, பாமக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...ELECTION BREAKING: வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு