ETV Bharat / state

சாத்தூரில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு - பெண்களுக்கான அரசாங்கத் திட்டம்

சாத்தூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கர்பிணிகளுக்கு வளைகாப்புச் சீதனம் வழங்கினார்.

சமுதாய வளைகாப்பு விழா : அமைச்சர் பங்கேற்பு

author img

By

Published : Dec 11, 2021, 12:15 PM IST

விருதுநகர்: சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சத்தூர் நகர ஒன்றியப் பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் விருதுநகர் மாவட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புச் சீதனம் வழங்கி சிறப்புரையாற்றினார்.

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்

விழாவில் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பெண் குழந்தைகள் பல்வேறு துறைகளில் தற்போது முன்னேறிச் செல்கின்றனர்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், என். மேட்டுப்பட்டி, பெரிய ஓடைப்பட்டி, ஒத்தையால் உப்பத்தூர், சாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமார் 450-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு அரசு சார்பில் சீமந்தம், சீர்வரிசை செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றுப் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பயன்படுத்திய கட்டிலைக் காணவில்லை: ஜெ.தீபா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.