விருதுநகர் மாவட்டம் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் முன்னிலையில் ரயில்வே பாதுகாப்புப் படையை சேர்ந்த குழுவினர் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நாடகத்தில் பயணிகள் உடமைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவை வாங்கி சாப்பிடக்கூடாது, சன்னல் ஓரங்களில் நகை போன்ற விலை மதிப்புமிக்க பொருள்களை வைக்கக் கூடாது, படிகளில் அமரக் கூடாது, ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் பொருள்களைத் தொடக்கூடாது போன்ற பாதுகாப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்தவரின் செல்போன் திருட்டு