விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகர், "தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 55 நாள்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்து வழங்கும் உரிமங்கள் உடனடியாக வழங்கிட வேண்டும். தற்காலிகமாக செயல்படும் கடைகளுக்கான உரிமங்கள் 30 நாள்களுக்கு முன்பே வழங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதியும் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும் சென்று வர வசதியாக, தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாள்கள் அரசு விடுமுறை வழங்க வேண்டும். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை அனைவரும் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள் என்றும் இந்திய பொருட்களை பயன்படுத்துங்கள் என்று கூறியிருப்பது மிகுந்த மகிழ்சியளிக்கிறது."எனக் கூறினார்.
இதையும் பாருங்க: தீபாவளி பட்டாசு போல் வெடித்த மின்கம்பிகள்