ETV Bharat / state

இறந்த மாணவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக அமைச்சர்கள் ஆறுதல் கூறவில்லை - ஹெச்.ராஜா

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்திற்கு திமுக அமைச்சர்கள் இதுவரையில் ஆறுதல் கூற செல்லாததற்கு காரணம் அவர் இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என ஹெச். ராஜா தெரிவித்தார்.

இறந்த மாணவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க. அமைச்சர்கள் ஆறுதல் கூறவில்லை

author img

By

Published : Jul 19, 2022, 9:13 AM IST

Updated : Jul 19, 2022, 9:28 AM IST

விருதுநகர்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று (ஜூலை 19) சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இந்தியா முழுவதும் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில், பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்மு 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெறுவார். இந்த ஜனாதிபதி தேர்தல், தமிழ்நாட்டில் போலியாக சமூகநீதி பேசுபவர்களை, செயல்படுபவர்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அதேபோல, துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்க்கட் ஆல்வா என்பவர், அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் 3600 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக காங்கிரஸின் முதல் குடும்பம் (காந்தி குடும்பம்) மீது குற்றம் சுமத்தியவர்.

இந்த காரணத்திற்காகவே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்படியிருக்கையில், காங்கிரஸ் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்றால், தேசத்துரோக காங்கிரஸ் ஆதரவு எனக்கு தேவையில்லை என்று அவர் கூறியிருக்க வேண்டும். ஆக எதிர்கட்சிகளின் இந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஊழல், சமூகவிரோத தீயசக்திகளின் மொத்த உருவம். எனவே, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜெகதீவ் தங்கரும் வெற்றி பெறுவார்.

ஹெச். ராஜா செய்தியாளர் சந்திப்பு

இருக்கன்குடி கோவிலை சுற்றிலும் தற்போது மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அள்ள தடை விதித்த நிலையில், தற்போது இந்த தடையை திமுக அரசு நீக்கியுள்ளது. மணல் அள்ளுவது, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தையும், மண்ணின் ஸ்திரத்தன்மையையும் அழித்துவிடும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மணல் அள்ள வழங்கப்பட்ட அனுமதியினை ரத்து செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர்கள் இதுவரையில் ஆறுதல் கூற செல்லாததற்கு காரணம் இறந்த மாணவி இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுதான். இந்து ஒருவர் உயிரிழந்தால், அவரின் இறப்பிற்கு அழுவதற்குக்கூட ஆள் இல்லை என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.

தமிழ்நாட்டில் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை இறந்த சம்பவத்திற்கும், சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவத்திற்கும் திமுக நேரில் சென்று ஆறுதல் சொன்னது. இறந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் காரணம். திராவிட மாடல் என்பது இந்துக்களுக்கு எதிரான மாடல்.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ ஆட்சித்தான் நடந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலினே ஒருமுறை பேசியுள்ளார். ஆகவே, முழுவதுமே இந்துக்களுக்கு எதிராக, இந்து விரோத தீயசக்தி ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எவ்வளவு விரைவாக தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக செய்வதுதான் இந்துக்களுக்கு நல்லது" என்றார்.

இதையும் படிங்க: கலவரத்தில் காயமடைந்த காவலர் - நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Last Updated : Jul 19, 2022, 9:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.