கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்தி தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக அந்தந்த மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். அதன்படி காவல் துறையினரும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்துவருகின்றனர்.
அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியில் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பூவையார் (45) என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. உடனே அவரைக் கைது செய்த காவல் துறையினர், அதையடுத்து அவர் வைத்திருந்த, 7 லிட்டர் சாராயத்தையும், 130 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து அழித்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருப்பூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது