ETV Bharat / state

'2021இல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் - anbumani ramados talks about hydrocarbon project

விருதுநகர்: 2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
சிவகாசியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
author img

By

Published : Jan 28, 2020, 8:18 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமாவின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவாகரம் மூலம் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தூக்கிலிட வேண்டும். நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தள்ளி வைக்கக்கூடாது. 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தப் பொதுத்தேர்வு அறிவிப்பு மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாவார்கள்" என்றார்.

சிவகாசியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "டெல்டா பகுதியை நாசப்படுத்தும் முயற்சிதான் ஹைட்ரோ கார்பன் திட்டம். முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிந்தவர். ஹைட்ரோ கார்பன் எடுக்க அவர் அனுதிக்கமாட்டார் என பாமக நம்புகிறது. 2021இல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். இதனால் மட்டுமே இட ஒதுக்கீட்டில் உள்ள சட்டச் சிக்கல்களை தீர்க்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கின்றது. அதை நீக்க வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கிராமசபை என்பது அரசியல் சாசனத்தில் உள்ள ஒரு அமைப்பு. எனவே கிராமசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை அரசு மதித்து அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேடில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

90 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ரயில்வே பட்ஜெட்!

Intro:விருதுநகர்
27-01-2020

5 மற்றும் 8வது வகுப்பு பொது தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்

Tn_vnr_01_anbumani_ramados_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா அவர்களின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த பாமக இளைஞரனி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிவகாசியில் 8 வயது சிறுமி விவாகரம் மூலம் தமிழ்நாடு முழுவதும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஊடகம் பள்ளி ஆசிரியர் மூலம் தமிழக அரசு ஏற்படுத்த விழிப்புணர்வை வேண்டும் மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை எங்கள் கட்சி எதிரான கொள்கையாக இருந்தாலும் குற்றவாளிகளை தூக்கிலில் போட வேண்டும் என தெரிவித்த அன்புமணி டெல்லி உயர் நீதிமன்றம் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தள்ளி வைக்கக்கூடாது என தெரிவித்தார். மேலும் 5 மற்றும் 8வது வகுப்பு பொது தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என அந்த சட்டத்தில் உள்ளது மத்திய அரசு 5 வகுப்பு 8 வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதை ஏற்றுக்கொள்வதை கட்டாயமாக்கப் படவில்லை ஆனால் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்த பொது தேர்வு அறிவிப்பு முலம் குழந்தை தொழிலாளர் முறை அதிகமாகும். ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவையில்லாத ஒன்று ஸ்டாலின் கையொழுத்து தொடக்கப் பட்ட ஒன்று டெல்டா பகுதியை நாசப்படுத்த இந்த முயற்சி நடைபெறுகிறது. டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தேவை இல்லாத ஒன்று டெல்டா பகுதியானது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு உணவளிக்கும் பகுதி ஆகவே டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி எனவும் அந்தப்பகுதியில் வேளாண் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து சட்டத்தை கொண்டு வரவேண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி எனவும் விவசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிந்தவர் எனவும் நிச்சயமாக அந்த சட்டத்தை கொண்டு வருவார் என பாமக நம்புவதாக தெரிவித்தார். 2021ல் சாதி வாரி மக்கள் தொகை கண்க்கு எடுப்பு நடந்த வேண்டும். மகாராஷ்டிரா ஒரிசா ஐயர் சட்டமன்றங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என தீர்மானங்கள் கொண்டு வருகின்றனர். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
இதை வைத்தால்தான் இட ஒதுக்கீட்டில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்க்க முடியும் குறிப்பாக தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கின்றது. அதை போக்க வேண்டுமென்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கிராம சபை என்பது அரசியல் சாசனத்தில் உள்ள ஒரு அமைப்பு ஆகும் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை அரசு மதித்து அவற்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி அரசு தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது அது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது வந்து உள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து பாமக பலமுறை புகார் தெரிவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் இதில் சம்பந்தப்பட்ட ஈடுபட்டவர்கள் துணை போன்றவர்கள் அத்தனை பேரும் கைது செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து முழுமையான விசாரணை செய்து கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து விதமான டிஎன்பிசி தேர்வுகளையும் ஆய்வுகள் நடத்தி இதில் யார் தவறு செய்தவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் அரசு பாதுகாக்க வேண்டும்

பேட்டி - அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞரணி தலைவர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.