ETV Bharat / state

பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய அணி மத்தியில் உருவாகும்: அமமுக வேட்பாளர் ஆருடம்!

விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய மாற்று அணி மத்தியில் உருவாகும் என அமமுக கட்சியின் வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

அமமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன்
author img

By

Published : Apr 3, 2019, 4:52 PM IST

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், விருதுநகர் அமமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் பேசியதாவது, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தொடர்ந்து என் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தொகுதியின் முக்கியமான தொழில்களான பட்டாசு தொழில், தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில், நெசவுத் தொழில், கைத்தறி ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மிகவும் நலிவடைந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என வருத்தம் தெரிவித்தார்.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு இந்தப் பிரச்னைகளெல்லாம் சரிசெய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று வாக்குறுதியளித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய மாற்று அணி மத்தியிலே உருவாகும் என்றும் ஆருடம் தெரிவித்தார்.

Intro:விருதுநகர்
03-04-19

பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் பிஜேபி மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய மாற்று அணி மத்தியிலே உருவாகும்- அமமுக கட்சியை சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் பேட்டி

Body:அமமுக கட்சியை சேர்ந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது நான் ஏற்கனவே விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணிக்கு பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தொடர்ந்து என் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது மேலும் இந்த தொகுதியின் முக்கியமான தொழில்களாக பட்டாசு தொழில் தீப்பெட்டித் தொழில் அச்சுத் தொழில் நெசவுத் தொழில் கைத்தறி தொழில் இருந்து வருகின்றது இவை அனைத்தும் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மிகவும் நலிவடைந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். நான் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு இந்தப் பிரச்சினைகளெல்லாம் சரிசெய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் மேலும் தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்ற கட்சிகளுக்கு ஒரு மாற்று சக்தியாக விளங்குகிறது எனவும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் பிஜேபி மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய மாற்று அணி மத்தியிலே உருவாகும். தமிழக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற மாற்று அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆதரவு அளிக்கும். ஒரு வார காலத்திற்குள் பரிசு பெட்டி சின்னமானது தமிழகத்தின் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடைந்துவிட்டது எங்களுடைய வெற்றிக்கு இது ஒரு கூடுதல் சக்தியாக அமைந்துள்ளது என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.