விருதுநகர் : ஆமத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தலைமையாசிரியராக சர்மிளா என்பவர் பணியாற்றி வருகிறார்
தலைமையாசிரியர் சர்மிளா சீரிய தலைமையின் கீழ் அரசு பள்ளி நல்லமுறையில் இயங்கிக் வரும் நிலையில், தற்போது அவ்வூரில் வசிக்கும் சில சமூக விரோதிகள் அதனை சீர்குலைக்கும் எண்ணத்தில் தலைமையாசிரியை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென புகார் அளித்துள்ளனர்.
அதில், தலைமையாசிரியர் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாகவும், அதனால் அவரை மாற்ற வேண்டுமெனவும் கூறப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
இதனையறிந்து, அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற தலைவர் குறிஞ்சி மலர் அழகர்சாமி தலைமையில், தலைமையாசிரியர் சர்மிளா மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதுபோன்று பொய்யான புகார்களை கொடுப்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமத்தூர் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க : ஓபிஎஸ்-இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்