விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமையவிருக்கும் இடத்தை பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஆர். கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "வரும் மார்ச் 1ஆம் தேதி முதலமைச்சர் வி௫துநகரில் அமையவி௫க்கும் ம௫த்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வர இ௫க்கிறார். இவ்விழால் 444 கிராமங்கள் பயன்பெறும் வகையில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைத் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அதிமுக ஆட்சியின் கடைசி அறிக்கையல்ல அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் நிதிநிலை அறிக்கை ஆகும். நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதி பற்றாக்குறை வருவது காலங்காலமாக வருகின்ற ஒன்றுதான். முந்தைய திமுக ஆட்சியிலும் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதி பற்றாக்குறை இருந்தது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மக்களை பாதிக்காதது. இதை அரசியல் விமர்சகர்களும் பொ௫ளாதார வல்லுநர்களும் வரவேற்கின்றபோது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டுமே எதிர்க்கிறார். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவ௫ம் இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்பார்கள் எனக் கூறி வரும் தேர்தலில் திமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மக்கள் தயாராக இல்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "நடிகர் கமல்ஹாசன், ஒரு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்திற்கு ஒரு நிதிநிலை அறிக்கை போடட்டும். அது சரியானதா என பார்த்துவிட்டு அதன் பிறகு அவர் கருத்தை இதில் ஏற்றுக் கொள்ளலாம்.
காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்ததை பத்து மாவட்டங்களின் மக்கள் வரவேற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் சட்டரீதியாக என்ன செய்வது என்பதை முதலமைச்சர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
விஜய் வீட்டில் நடத்தியவருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. வருமானவரித் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே விஜய்யிடம் சோதனை நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அதிமுக அமைச்சர் வீட்டிலேயே கூட வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் ரஜினிக்கு சமமாக தற்போது எந்த நடிகரும் கிடையாது. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை எனவும் ரஜினிக்கு நிகர் அஜித் மட்டுமே என்றார். அவர்கள் இருவரும்தான் ஜல்லிக்கட்டு காளைகள். ரஜினி மலை அஜித் தல என அடுக்கு மொழி வசனங்களில் பேசினார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள், அதிமுகவின் முன்னணி பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்' - செ.கு. தமிழரசன்