விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரை விமர்சித்து பேசியிருந்தார்.
இதனைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை கிழித்து, அவரது உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முற்பட்டனர். இதனால், அப்பகுதியில் திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கண்டித்து, கோயம்புத்தூர் மாவட்டம் தேர்முட்டி பகுதியில் ஆ.ராசாவின் புகைப்படத்தை மிதித்தும், கிழித்தெறிந்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு திரண்ட காவல் துறையினர், ராசாவின் உருவப்படத்தை எரிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, காவல் துறையினருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விவாதத்துக்கு நான் தயார், ஆ. ராசா தயாரா? ராஜேந்திர பாலாஜி