ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் விருதுநகரில் முப்பெரும் விழா: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு! - அதிமுக ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட மூன்று விழாக்களை சேர்த்து முப்பெரும் விழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

minister rajendra balaji
author img

By

Published : Nov 15, 2019, 7:35 PM IST

Updated : Nov 15, 2019, 8:03 PM IST

அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மற்றும் சாத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படவேண்டிய முறை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

விருநகரில் முதலமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய மூன்று நகராட்சிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு 444 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தையும் சேர்த்து முதலமைச்சர் தலைமையில் முப்பெரும் விழா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு விருதுநகரில் கொண்டாடப்படும்’ என்றார்.

மேலும், மு.க. அழகிரி மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அரசியலில் இல்லாதவர்கள் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!

Intro:விருதுநகர்
15-11-19

விருதுநகரில் மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் தலைமையில் அடிக்கல் நாட்டப்படும் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

Tn_vnr_02_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மற்றும் சாத்தூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் சாத்தூா் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்திற்க்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஸ்ரீவில்லிப்புத்தூா் சட்டமன்ற உறுப்பினா் கலந்து கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளாட்சி தோ்தலுக்கு பின்னா் விருதுநகரில் முதலமைச்சா் தலைமையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்லக்கூடிய தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் சாத்தூா் அருப்புக்கோட்டை விருதுநகா் ஆகிய மூன்று நகராட்சியின் குடிநீா் தேவையை கருத்தில் கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாக கொண்டு 444 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ள திட்டத்தையும் சோ்த்து முப்பெரும் விழா எடுக்கப்படும் என்றார் மேலும் தோ்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது என்பது தவறான செயல் கிடையாது என்றார். மேலும் மு.க.அழகரி மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு பற்றிய கேள்விக்கு அரசியலில் இல்லாதவா்கள் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என மு.க.அழகரி மற்றும் ரஜினிகாந்த் சந்திப்பு பற்றி கே.டி.இராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்தார். Conclusion:
Last Updated : Nov 15, 2019, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.