காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட நிர்வாகியும், ரஜினியின் ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "நடிகர் ரஜினி இன்னும் ஒரு சில மாதங்களில் கட்சி தொடங்கி, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்பார். தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு அவர்களது வெற்றிடத்தை ரஜினிகாந்த்தான் பூர்த்தி செய்வார்.
நடிகர் ரஜினி இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கையைப் பெற்று நல்லதொரு ஆட்சியை கொடுப்பார். பத்து மேடைகளில் ஸ்டாலின் பேசுவதைவிட பத்து நிமிடங்கள் ரஜினி பேசுவதே மக்களிடத்தில் பிரபலமாகிறது.
ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகுதான் கூட்டணியா என்பது குறித்து அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க: ஆசிரியை அடித்து கண் பார்வை இழந்த மாணவன்: பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ்!