விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கே.புதூரைச் சேர்ந்தவர் கதிரேசன் ( வயது 43). இரண்டு கால்களை இழந்து மாற்றுத்திறனாளியாக உள்ள கதிரேசனை அவரது தாயாரின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் அவரது தாய்க்கு மாலைக் கண் என்பதால் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகிறார், கதிரேசன்.
இந்த நிலையில் இலவச வீட்டுமனைப்பட்டா கோரி கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அலைவதாக கதிரேசன் கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அலுவலர்கள் தன்னை தட்டிக்கழிப்பதாகவும் முறையான மாற்றுத்திறனாளி சான்றிதழ் வைத்துள்ள போதிலும் தனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மறுக்கப்படுவதாகவும் எனவும் வேதனை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தவழ்ந்து மனு கொடுக்க வந்த கதிரேசனை கண்ட பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் அவருக்கு அலுவலர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அரசு புறம்போக்கு, நீர்நிலைகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை