தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திவுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், அருப்புக்கோட்டை பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த, 80 வயது முதியவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது அனைவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காளையர் கரிசல்குளத்தைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 10ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கபடும்போது முதியவருக்கு காய்ச்சல் தீவிர இருமல் இருந்துள்ளது.
அதன்பின்னர், கரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தன. இதையடுத்து அவருக்கு மீண்டும் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:பூனையை காப்பாற்ற முயன்று 30அடி கிணற்றில் விழுந்த முதியவர்