விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பொய்யாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ், லட்சுமி தம்பதி. இந்தத் தம்பதி வீட்டிலிருந்து உணவு தயாரித்து சுவாமி தரிசனம் செய்ய திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு குடும்பத்தினர் 8 பேருடன் சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் எடுத்துச் சென்ற உணவு கெட்டுப் போனது தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டதால் வாந்தி மயக்கமடைந்தனர். இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு விஷமாக மாறி வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திசை மாறி சென்ற மகன் வீடு திரும்ப தாய் கோரிக்கை!