ஜம்மு காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டம், சோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேனன் ஹாசன் (23). இவர் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த (ஜன.1) ஆம் தேதி இந்த மாணவர் கரோனா விழிப்புணர்வு பயணமாக ஜம்மு காஷ்மிரிலிருந்து கன்னியாகுமரி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களை 27 நாள்களில் கடந்து, இன்று (ஜன.27) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய மாணவர் படை மூலம் இந்த மாணவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "இளைஞர்கள் எந்தச் ஒரு சூழ்நிலையையும் சந்திக்க தங்கள் உடல் வலிமையாக வைதிருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்" என்றார். இன்று இரவு கன்னியாகுமரியை சென்றடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்... தந்தையைச் சொந்த ஊர் அழைத்துச் சென்ற சிறுமி!