ETV Bharat / state

ஹீலியம் பலூன் மூலம் 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு - Tamil Nadu Legislative Assembly Election 2021

விருதுநகர்: சிவகாசியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹீலியம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹூலியம் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி

author img

By

Published : Mar 25, 2021, 11:05 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களைக் கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், சிவகாசி பேருந்து நிலையத்தில் ”100 விழுக்காடு வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ஹீலியம் பலூனை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான கண்ணன் பறக்கவிட்டார்.

ஹீலியம் பலூன் மூலம் 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு
அப்போது, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) வை.ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பாசிசி சக்திகள், திமுக சந்தர்பவாத அரசியலில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும் - ஓவைசி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.