ETV Bharat / state

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு... 100 அடி உயர டவர் மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்... - Villupuram District

விழுப்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள் 100 அடி உயர டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
author img

By

Published : Aug 30, 2022, 10:12 AM IST

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள காங்கேயனூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்த கோபுரத்தால் அங்குள்ள மக்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி, அப்பகுதி இளைஞர்கள் 6 மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இருப்பினும் சில நாள்களுக்கு முன்பு காங்கேயனூர் கிராமத்தில் 100 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கிராமத்து இளைஞர்கள் நேற்று செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.