தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மணல் பருத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருள் பிரகாஷ் (21). இவர் தர்மபுரியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுடன் அருள் பிரகாசுக்கு சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மிரட்டல்
அந்தப் பெண் கர்நாடக மாநிலம், ராம் நகரில் உள்ள செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட பழக்கத்தால், அவ்வப் போது இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் நெருக்கமாக பழகும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன், அவ்வாறு செய்யக்கூடாது என்றால் ஒரு லட்சம் ரூபாய் பணம் தருமாறு இளம் பெண்னுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கைது
இது குறித்து அந்த இளம்பெண் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருள்பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: சொத்து விவகாரம்: மனைவி, மகளைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்