ETV Bharat / state

கரோனா அச்சத்தால் இளைஞர் தற்கொலை - கரோனா தொற்று பாதித்த இளைஞர் தற்கொலை

விழுப்புரம்: கரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Youngster commits suicide due to corona fear

author img

By

Published : Jul 15, 2020, 7:46 PM IST

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களாக செங்கல்பட்டில் பணிபுரிந்துவந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர் திரும்பிய இவருக்கு செங்கல்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

இதனால் கரோனா தொற்று குறித்து அச்சத்தில் இருந்த ஜெயக்குமார் நேற்று (புதன்கிழமை) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இன்று விழுப்புரம் சுகாதாரத் துறை அலுவலர்களைத் தொடர்புகொண்ட, செங்கல்பட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.

இதன்பின்னர் ஜெயக்குமாரைத் தேடிவந்த சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்துள்ளது. இவர், கரோனா தொற்று குறித்த மன உளைச்சலினால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும் உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

உதவிக்கு அழையுங்கள்:

அரசு உதவி மையம்- 104

சினேகா- +91 44 2464 005, +91 44 2464 0060

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.