ETV Bharat / state

பல்லி விழுந்த குளிர்பானத்தை அருந்திய சிறுமிக்கு தீவிர சிகிச்சை - Young girl drinks cool drinks with which lizzard

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பல்லி விழுந்த குளிர்பானம் குடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி
author img

By

Published : Sep 26, 2019, 6:53 PM IST

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர்கள் சீனிவாசன் - கண்மணி தம்பதி. இவர்களின் மகள் அனுஷ்கா(8). சிறுமி அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனை செய்த குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். அப்படி குடிக்கும் போது பாட்டிலின் அடியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

பதற்றமடைந்த கடை உரிமையாளர் சிறுமியை உடனடியாக சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்று வரும் சிறுமி

இதை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் ஆத்தூரில் இயங்கிவரும் குளிர்பான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். இதையறிந்த நிறுவன உரிமையாளர் எவ்வளவு செலவு ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வதாகவும், தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளியுங்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:tn_vpm_01_poison_coolrings_vis_tn10026Body:tn_vpm_01_poison_coolrings_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலத்தில் பல்லி விழுந்த குளிர்பானம் குடித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காந்திநகர் தெருவை சேர்ந்த சீனிவாசன் கண்மணி தம்பதிகளின் மகள் அனுஷ்கா என்ற 8 வயது சிறுமி இன்று காலை அதே பகுதியில் உள்ள பெட்டி கடை ஒன்றில் லவ் ஸ்பாட் என்ற குளிர்பானத்தை வாங்கி அருந்தியுள்ளார். கடைசி வரை அருந்தும்போது பாட்டிலின் உள்ளே பள்ளி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதை குளிர்பானம் விற்ற அந்த கடைக்காரரிடம் சிறுமி கூறியுள்ளார்.பதற்றமடைந்த கடைக்காரர் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.பின்பு அரசு மருத்துவமனையின் ஆலோசனை படி அங்கு உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேலும் அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமி சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். மயக்க நிலையில் இருந்து வரும் சிறுமிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் இயங்கி வரும் அந்த குளிர்பான நிறுவனத்திற்கு சிறுமி உறவினர்கள் போன் செய்து தகவல் அளித்துள்ளனர். அந்த நிறுவனத்திலிருந்து சிறுமிக்கு என்ன செலவானாலும் சரி அதை முழுவதும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் சிகிச்சை அளியுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்த குளிர்பான நிறுவனத்தை சுகாதாரத் துறையினரும், உணவு பாதுகாப்பு துறையினரும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.