விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கு கலா (35) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பிய ராஜா, இன்று காலை தனது வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து கலா தனது உறவினர்களிடத்தில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தகாத உறவால் விபரீதம் - கணவன் கொலை; மனைவி கைது தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜாவின் மனைவி கலாவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ராஜாவின் நண்பர் ரஞ்சித் என்பவருடன் கலாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், சம்பவத்தன்று இருவரும் தனிமையில் இருந்ததை ராஜா பார்த்துவிட்டு தட்டிக் கேட்டதால் இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கலாவைக் கைது செய்த காவல் துறையினர் தலைமறைவான ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலிக்கு கத்திக்குத்து!