விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரை செல்வா நகரைச் சேர்ந்தவர் ஷமிலுதீன் (வயது 30). இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த குழந்தையின் தாய் பிரசவத்தின்போது இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த குழந்தையை ஷமிலுதீன் தனது தாய் ஷகிலா உதவியுடன் வளர்த்து வந்துள்ளார். தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த ஷமிலுதீன், அப்சானா என்ற 22 வயது பெண்ணை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து அவரின் 3 வயது குழந்தையை தாய் ஷக்கீலாவிடம் வளர்க விட்டு விட்டு, ஷமிலுதீன் மற்றும் அப்சானா ஆகிய இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஷமிலுதீனுக்கும் தாய் ஷக்கீலாவுக்கும் இடையே குழந்தையை பார்த்துக்கொள்வதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை தன்னுடன் அழைத்து வந்த ஷமிலுதீன் தனது இரண்டாவது மனைவி அப்சனாவிடம் விட்டுள்ளார்.
ஆனால் அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவரை அனுகிய ஷமிலுதீனிடம், குழந்தைக்கு நாள்தோறும் இன்சுலின் ஊசி போட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை துளியும் கண்டுகொள்ளாமல் இருந்த அப்சனா குழந்தையை கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஷமிலுதீன் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியூர் வெலைக்கு சென்ற போது குழந்தை உயிரிழந்தது.
ஊருக்கு திரும்பிய அவர் குழந்தையின் இறப்பு குறித்து அப்சனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அப்சனா முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஷமிலுதீன், விழுப்புரம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இதனை தொயர்ந்து அப்சனாவை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பட்டியலின பெண்ணை தாக்கிய மாற்று சமூகத்தினர் - காவல் துறை நடவடிக்கை என்ன?
விசாரணையில், குழந்தையை சுவரில் அடித்து தான் கொலை செய்துவிட்டு நாடகமாடியதை அப்சானா ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 35 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தர். குழந்தை என்றும் பாராமல் சித்தியே குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.