விழுப்புரம் அடுத்த காணை அருகே உள்ள ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மனைவி வடமலை. இவர், கடந்த மார்ச் 9 ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.-மில் தனது வங்கி கணக்கின் இருப்புத்தொகை விவரத்தை காணச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், வடமலைக்கு உதவும் வகையில் அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இருப்புத்தொகையை காண்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வடமலை ஒருமாதம் கழித்து வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து சிறுக, சிறுக 5.65 லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வடமலை இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஏ.டி.எம்.மில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அந்தப் பதிவில் வடமலையிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கிய அந்தப் பெண், வாங்கிய கார்டுக்கு பதிலாக மாற்று கார்டை கொடுத்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மூதாட்டியின் ஏடிஎம்-ஐ பயன்படுத்தி பணத்தை திருடி வந்துள்ளார். குற்றப் பிரிவு காவலர்கள் அந்தப் பெண்ணை ட்ராக் செய்து பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: