Tamilnadu By Election 2019: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் தொகுதி முழுவதும் பரப்புரை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசூர், பொண்ணகுப்பம் பகுதிகளில் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி எங்கள் பக்கம் தான். தொகுதி மக்கள் எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருவார்கள். அப்படி பெற்றுத் தரும் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி' என்றார்.
இதையும் படிங்க:
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதிகளில் ரூ.2.98 லட்சம் பறிமுதல்!