கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டு, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து மளிகை பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு என சில மளிகை கடைகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளதைப்போல், விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: செய்தியாளர்களைச் சந்திக்கும் நிதியமைச்சர்