விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள நரசிங்கராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சர்தார் (53). இவருக்கு நேற்று காலை (ஆகஸ்ட் 04) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் சர்தாரை, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில், சர்தார் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சொந்த ஊரான மேல்எடையாளம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் சர்தாரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியிலிருந்த மரக்கிளைகளை வெட்டி சாலையில் போட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்துநிறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவரது உடல் செஞ்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: லெபனானில் பயங்கர குண்டு வெடிப்பு!
கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - விழுப்புரம் கரோனா இறப்பு
விழுப்புரம்: செஞ்சி அருகே கரோனாவால் உயிரிழந்தோரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.