விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி வரையில் மூன்று ஆயிரத்து 764 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலை தடுப்பது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று (ஆக.1) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிட்காயின் மோசடிக்காக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மூவர் கைது!