விழுப்புரத்தில் மார்ச் 23ஆம் தேதி அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் அவர் மீது வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
பரப்புரையின் போது, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆகியோர் குறித்து டிடிவி தினகரன் அவதூறாகவும் இழிவாகவும் பேசியதாக வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 153, 157 ஜி, 600, 504, 125 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.