தமிழ்நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் வரும் ஜுன் 30ஆம் தேதி வரை ஐந்தாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று இரண்டு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள், இரண்டு பேருக்கும் மேல் பயணம் செல்பவர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.
மேலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் வெளிவரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறி சாலைகளில் செல்லக்கூடாது போன்ற அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.
மேலும், “விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” எனவும் அவர் எச்சரித்தார்.