விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள இந்திராநகர் பகுதியில் திண்டிவனம் காவல், வனத்துறையினர் இன்று (ஆக.13) காலை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை துரத்தி பிடிக்க முயற்சித்துள்ளனர். அவர்கள் கையில் இருந்த சாக்கு மூட்டையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் அதனை பிரித்து பார்த்தபோது, அதில் 90 கிலோ எடை கொண்ட நீண்ட கொம்புகளை உடைய மான் இறந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் காவல் துறையினர், வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் அவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படியும்: கடலில் தத்தளித்த புள்ளி மான்... துரிதமாக செயல்பட்ட மீனவர்கள்!