ETV Bharat / state

'பற்றாக்குறை இல்லை; பதுக்கிட வேண்டாம்' - கொரோனா

விழுப்புரம்: பொதுமக்கள் அனைவரும் இன்று ஒருநாள் தனது இல்லங்களிலிருந்து கரோனா வைரஸ் கிருமி மேலும் பரவாமல் இருக்க காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Villupuram police
Villupuram police
author img

By

Published : Mar 22, 2020, 11:39 AM IST

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலகெங்கிலும் கரோனா வைரஸ் தொற்றால் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். கடந்த எட்டு வாரங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் கடந்த மூன்று வாரங்களாக இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

அதைச் சாத்தியப்படுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர், மருத்துவமனைகளோடு இணைந்துசெயல்பட்டு வைரஸ் தொற்றைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமது தாய் நாட்டு மக்கள் இந்தப் பெருந்தொற்றிலிருந்து காத்திட இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அவரவர் இல்லங்களிலேயே இருக்கும்பட்சத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கலாம் என அறிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களைப் பெறுவதற்குப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே எவரும் கூட்டமாகச் செல்ல வேண்டாம். பொருள் பற்றாக்குறை ஏற்படும் என அதிகளவில் பெற்று பதுக்கிட வேண்டிய அவசியமில்லை. எனவே விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இன்று ஒருநாள் தனது இல்லங்களிலிருந்து கரோனா வைரஸ் கிருமி மேலும் பரவாமல் இருக்க காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் இன்று அளித்திடும் ஒத்துழைப்புக்கு காவல் துறையின் சார்பில் மாலை 5 மணிக்கு அனைத்து காவல் வாகனங்களிலும் சைரன் ஒலி எழுப்பி நன்றி தெரிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சூழல் - நீலகிரியில் தேயிலை தூள் தேக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.